அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரான் மீதான அரதிரடித் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை பிரதமர் மோடி ஆதரிக்கிறாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரான் மீதான ஒருதலைபட்ச தாக்குதல்களும், மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரின் கருத்துகள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
உலகில் இந்தியாவின் அந்தஸ்தை மௌனம் குறைக்கிறது என்பதை பிரதமர் மோடி புரிந்துகொள்ள வேண்டும்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் விரோதங்கள் பலவீனமான பிராந்தியத்தைப் பரந்த மோதலுக்குத் தள்ளுவதாக அவர் கூறினார்.
கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் உள்பட கோடிக்கணக்கான மக்கள் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.
பாதுகாப்பு கவலைகள் உண்மையானவை என்றாலும், இறையாண்மையை மீறும் தாக்குதல்கள் நெருக்கடியை மேலும் மோசமாக்கும்.
ஈரான் மீதான ஒருதலைபட்ச தாக்குதல்களும், மற்ற மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டும்.
வன்முறையைத் தீர்க்க பேச்சுவார்த்தை மற்றும் கட்டுப்பாடும் மட்டுமே அமைதிக்கான ஒரே வழியாகும். இந்தியா தார்மீக ரீதியாகத் தெளிவாக இருக்க வேண்டும்.
சர்வதேச சட்டம் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாப்பதில் வெளிப்படையாகப் பேச நமக்குத் தைரியம் இருக்க வேண்டும்.
நமது வெளியுறவுக் கொள்கை இறையாண்மை மற்றும் சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பதில் வேரூன்றியுள்ளது. அது நிலையானதாக இருக்க வேண்டும்.
இந்த வன்முறையை தீர்க்க பிரதமர் மோடி பேச வேண்டியது அவசியம்.மௌனம் காப்பது ஏன்? உலக ஒழுங்கை வரையறுக்க நாட்டின் தலைவரைப் படுகொலை செய்வதை அவர் ஆதரிக்கிறாரா? இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Summary
Amid the US-Israel-Iran conflict, Congress leader Rahul Gandhi on Tuesday said Prime Minister Narendra Modi must speak up and answer as to whether he supports the assassination of a head of state as a way to define the world order.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்களை நீங்கள் மன்னிக்கத் தேவையில்லை; நீங்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! - ராகுல் காந்தி வலியுறுத்தல்!

சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!

கமேனி இறுதிச்சடங்கு: ஈரான் செல்கிறாரா பிரதமர் மோடி?
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



