சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

மாணவர்களை நீங்கள் மன்னிக்கத் தேவையில்லை; நீங்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்புகோர வலியுறுத்தி ராகுல் காந்தி கூறியிருப்பது குறித்து...

PM Modi | LoP Rahul Gandhi

பிரதமர் மோடி | ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புகோர வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஒரு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வேதனையைப் பார்ப்பதைவிட வேதனை வேறு எதுவுமில்லை.

வினாத்தாள் கசிந்தது, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, பல வருட உழைப்பு ஒரே இரவில் அழிக்கப்பட்டது, நேர்மையற்ற அமைப்பில் நேர்மையுடன் இருக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், இன்னமும் மாணவர்களை மன்னிக்கும் தைரியம் பிரதமருக்கு இருக்கிறது.

வேதனையில் இருக்கும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை. வினாத்தாள் கசிவால் எதிர்காலம் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரைக்கூட அவர் சந்திக்கவில்லை.

மாணவர்களுக்கு அவரது மன்னிப்பு தேவையில்ல்லை. அவர்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய மாணவர்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில்தான், பிரதமர் மோடிதான் மாணவர்களிடம் மன்னிப்புகோர வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதனிடையே மாமல்லபுரத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசிய ராகுல்காந்தி, தமிழ்நாட்டை தொகுதி மறுவரையறை கடுமையாக பாதிக்கும். மக்களின் எதிர்காலம் குறித்த பிரச்னை இது. தொகுதி மறுவரையறையை தமிழ்நாடு மக்களும், அரசியல் கட்சியினரும் வீழ்த்த வேண்டும்.

தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் எட்டப்பர்கள். தொகுதி மறுவரையறை தமிழ்நாடு மக்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்துவிடும் என்று தெரிவித்தார்.

Summary

PM Modi should apologize to students, says LoP Rahul Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.