இலங்கை பிரதமர் ஆனார் ஹரிணி அமரசூரிய
இலங்கையின் புதிய பிரதமராக, தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கட்சியின் முக்கிய தலைவரும், சமூக ஆர்வலருமான ஹரிணி அமரசூரிய (54) செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.


இலங்கையின் புதிய பிரதமராக, தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கட்சியின் முக்கிய தலைவரும், சமூக ஆர்வலருமான ஹரிணி அமரசூரிய (54) செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
பெண்கள் உரிமை ஆர்வலரும் கல்வியாளருமான ஹரிணி, இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. 1994-ஆம் ஆண்டில் சிறீமாவோ பண்டாரநாயக பதவியேற்றதற்குப் பிறகு, இலங்கை பிரதமராக ஒரு பெண் பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக வெற்றி பெற்று நாட்டின் புதிய அதிபராக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
அந்த நாட்டில் இடதுசாரி தலைவர் ஒருவர் அதிபராகப் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து, தலைநகர் கொழும்பிலுள்ள அதிபர் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதிபராக பொறுப்பேற்றார்.
அதற்கு முன்னதாகவே, பிரதமர் தினேஷ் குணவர்த்தன தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு வசதியாகவும், புதிய ஆட்சி சூழலுக்கு ஏற்ற புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கு ஏதுவாகவும் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் கூறினார்.
அதையடுத்து, புதிய பிரதமராக ஹரிணி அமரசூரியாவை திசாநாயக நியமித்தார். அவருக்கு நீதித் துறை, தொழிலாளர் நலத் துறை, தொழில் துறை, அறிவியல் & தொழில்நுட்பம், சுகாதாரத் துறை, முதலீடுகள் துறை ஆகிய அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அவருடன் என்பிபி கட்சியைச் சேர்ந்த விஜித ஹேரத், லக்ஷ்மண் நிபுன ஆராச்சி ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...