நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஏற்பட்ட வெள்ளித்தில் சிக்கி 32 பேர் பலியானார்கள்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் வெள்ளிக்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரில் ஒருசில பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்பாளர்கள் மேல் தளங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர். வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த 4 பேர் ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் இருந்து 1,053 பேர் மீட்கப்பட்ட நிலையில் அவர்களில் பதினேழு பேர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே மீட்புப் பணிகளில் உதவுமாறு நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மழை காரணமாக காத்மாண்டுவின் பெரும்பாலான பகுதகளில் மின்சாரமும் இணையமும் துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளில் இரவில் பேருந்துகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்த மழை வார இறுதியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேபாளத்தில் பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கி பொதுவாக செப்டம்பர் நடுப்பகுதியில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.