கனடாவில் கோயில்களில் உண்டியல்களை உடைத்துத் திருடிய இந்திய வம்சாவளி நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கனடாவின் பீல் நகராட்சியில் 5 முறை வழிபாட்டுத் தளங்களுக்குள் புகுந்து உண்டியல்களை உடைத்து பணத்தைத் திருடியதாக ஜகதீஷ் பந்தீர் எனும் இந்திய வம்சாவளி நபர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையில் மட்டும் 3 வழிபாட்டுத் தளங்களில் அடையாளம் தெரியாத நபர் அத்துமீறி நுழைந்து, உண்டியல் பணத்தைத் திருடிய சம்பங்கள் நிகழ்ந்துள்ளன. சிசிடிவி கேமராக்களில் பதிவான காணொலிகள் கிடைத்ததுள்ளதாகக் காவல்துறையினர் கூறினர்.
தொடர் உண்டியல் உடைப்புச் சம்பவங்களை மற்ற காவல்துறைப் பிரிவுகளுடன் இணைந்து விசாரித்த பீல் காவல்துறை, சந்தேகத்திற்குரிய நபரைக் கைது செய்துள்ளது.
இதையும் படிக்க: சீனாவில் பனிப்பொழிவால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
பிற பகுதிகளிலும் இதே நபர் பணத்தைத் திருடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.