கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வெற்றி பெற்றதாக அறிவிக்கும் பாகிஸ்தானின் இருபெரும் கட்சிகள்: தேர்தல் நிலவரம் என்ன?

பாகிஸ்தானின் பொதுத் தேர்தல் முடிவுகள் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் வெளியாகி வருகிறது.

News image

நவாஸ் ஷெரீப், இம்ரான் கான்

Updated On :9 பிப்ரவரி 2024, 6:55 am

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சி, தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை வென்றுள்ளதாக அறிவித்துள்ளது. தாமதமாக வெளியாகும் முடிவுகள் மோசடி செய்யப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) வெளியிட்டுள்ள குறிப்பில் ஆட்சியில் உள்ள நவாஸ் ஷெரீபின் முஸ்லீம் லீக் கட்சி தனது தோல்வியை ஒப்புகொள்ளுமாறு கேட்டுள்ளது.

இதனை மறுத்துள்ள முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி (பிஎம்எல்-என்), முன்கூட்டிய மற்றும் பாரபட்சமான ஊகங்கள் இது, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டுக்கு ஆதரமாக பிடிஐ, தனது வேட்பாளர்கள் 150-க்கும் அதிகமான இடங்களில் பெரும்பான்மை பெற்றதற்கு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விவரங்கள் அடங்கிய படிவம் 45 தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், மோசடி செய்து பிடிஐ வேட்பாளர்களிடம் மிரட்டி பொய்யான படிவங்களில் கையெழுத்து பெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது பிடிஐ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.