இஸ்ரேல்- ஹமாஸ் போர்: அதிர்ச்சியளிக்கும் எண்கள்!

100-வது நாளாகத் தொடர்ந்துவரும் போர் இன்னும் தீவிரமாகிவருவதற்கு இந்த எண்கள் உதாரணம்.
கட்டட இடிபாடுகளிடையே பாலஸ்தீனர் | AP
கட்டட இடிபாடுகளிடையே பாலஸ்தீனர் | AP

இஸ்ரேல் - ஹமாஸ் போர் 100-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. இரு எதிரிகளின் சண்டை- கணிசமான பலி எண்ணிக்கையை உண்டாக்கி வருகிறது.

ஹமாஸுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அக்.7 முதலே இஸ்ரேலுடன் மோதலில் இருந்து வருகிறது. 

போர் விரிவடைந்துவரும் நிலையில், போரில் பலியானவர்களின் எண்ணிக்கை உள்பட அதிர்ச்சியளிக்கும் எண்களை வெளியிட்டுள்ளது அசோசியேடட் பிரஸ்.

பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் தகவலின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட விபரங்கள் இவை.

இறப்புகள்

காஸாவில் பாலஸ்தீனர்கள் பலி எண்ணிக்கை - 23,843

அக்.7 தாக்குதலில் இஸ்ரேலியர்கள் பலியானது: 1200-க்கும் மேல்

மேற்கு கரையில் உள்ள பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை - 347

காஸாவில் பலியான பத்திரிக்கையாளர்கள் : 82

பலியான ஐ.நா உறுப்பினர்களின் எண்ணிக்கை: 148

சுகாதார பணியாளர்கள்: 337

அக்.7 தாக்குதலில் இஸ்ரேல் டாங்கியை அழித்த பாலஸ்தீனர்கள் | AP
அக்.7 தாக்குதலில் இஸ்ரேல் டாங்கியை அழித்த பாலஸ்தீனர்கள் | AP

ராணுவ வீரர்கள்

அக்.7 ஹமாஸ் தாக்குதலில் பலியான இஸ்ரேலிய வீரர்கள்: 314

இஸ்ரேல் தாக்குதலில் பலியான ஹமாஸ் வீரர்கள்: 8,000-க்கும் மேல்

காஸாவில் தரைவழி தாக்குதலில் பலியான இஸ்ரேல் வீரர்கள்: 187

சில விகிதங்கள்

காஸாவில் தகர்க்கப்பட்ட கட்டடங்கள்: 45-56%

காஸாவில் தகர்க்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள்: 69% மேல்

பசியால் வாடும் பாலஸ்தீனர்கள்: மொத்த மக்கள்தொகையில் 26% (5,76,600)

காஸாவில்  கணவர் மற்றும் குழந்தையைப் பறி கொடுத்த பாலஸ்தீன பெண்| AP
காஸாவில்  கணவர் மற்றும் குழந்தையைப் பறி கொடுத்த பாலஸ்தீன பெண்| AP

காஸாவில் பள்ளிக்குச் செல்ல இயலாத மாணவர்கள்: 100% (6 லட்சதுக்கும் மேல்)

இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள்: 85% (18 லட்சம் பேர்)

இடம்பெயர்ந்த இஸ்ரேலிய மக்கள்: 2.6% (2,49,263)

பிணைக்கதிகள்

அக்.7 தாக்குதலில் கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்: 250-க்கும் மேல்

விடுவிக்கப்பட்டவர்கள்: 121 

பிணையில் பலியானவர்கள்: 33

இஸ்ரேல் ராணுவம் | AP
இஸ்ரேல் ராணுவம் | AP

இஸ்ரேல் விடுவித்த பாலஸ்தீனர்கள்: 240

இஸ்ரேலின் சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்கள் விபரம் தெரியவில்லை.

ஏவுகணைகள்

இஸ்ரேல் மீது ஏவப்பட்ட கணைகள்: 14,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com