தைவான் விஷயத்தில் தலையிட வேண்டாம்: பிலிப்பைன்ஸுக்கு சீனா கண்டனம்!

தைவான் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு பிலிப்பைன்ஸ் வாழ்த்து கூறியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
தைவான் விஷயத்தில் தலையிட வேண்டாம்: பிலிப்பைன்ஸுக்கு சீனா கண்டனம்!

தைவான் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றவருக்கு பிலிப்பைன்ஸ் வாழ்த்து கூறியதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

தைவான் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற லாய் சிங் தே-வுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் வாழ்த்து கூறியதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் தூதருக்கு செவ்வாய்க்கிழமை சீன வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “சீனா உடனான அரசியல் உறுதிமொழிகளை பிலிப்பைன்ஸ் மீறியுள்ளது. மேலும் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுள்ளது.

தைவான் விவகாரத்தில் விளையாட வேண்டாம் என்று பிலிப்பைன்ஸிடம் தெரிவித்துக் கொள்கிறோம். தைவான் பிரிவினைவாதிகளுக்கு தவறான சமிக்ஞைகள் அனுப்புவதை பிலிப்பைன்ஸ் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி பிலிப்பைன்ஸ் தூதருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, திங்கள்கிழமை தைவானுடன் இருதரப்பு உறவை பலப்படுத்த விரும்புவதாகக் கூறி லாய் சிங்குக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் மார்க்கோஸ் ஜூனியர் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com