அமெரிக்காவை உலுக்கும் குளிர்

அமெரிக்காவில் கடும்பனிச் சூழல் நிலவி வருகிறது.
டெக்சாஸ் சாலைகளில் பனிப்பொழிவு | AP
டெக்சாஸ் சாலைகளில் பனிப்பொழிவு | AP
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் பல பகுதிகளில் அபயாகரமான குளிர் நிலவி வருகிறது. குளிர் அலைகள் வீசுவதால் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது.

85 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு செவ்வாய்கிழமை மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ஓரேகான் பகுதி சனிக்கிழமை முதலே மின் தடையை எதிர்கொண்டுவருகிறது. போர்ட்லாண்ட் அதிகாரிகள் உறைபனி நிலவுவதால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சாலை வழியாக பயணிப்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பனிப்பொழிவால் உறைபனி உருவாகியுள்ளதாகவும் அதன் கனத்தால் மரங்கள் மற்றும் மின்சார இணைப்புகள் சேதமடைந்து விழுவதற்கான அபாயம் குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டென்வர் பகுதியில் சாலையில் வாகனங்கள் | AP
டென்வர் பகுதியில் சாலையில் வாகனங்கள் | AP

விமான சேவை, விளையாட்டுப் போட்டிகள், அதிபர் தேர்தலுக்கான பரப்புரை எல்லாமும் குளிரால் பாதிப்படைந்துள்ளது.

போர்ட்லாண்ட் பகுதியில் உடல்வெப்ப உயர்வால் ஏற்படும் ஹைப்போதெர்மியா நோயினால் இருவரும் மரம் வீட்டின் மேல் விழுந்ததால் ஒருவரும் பலியாகியுள்ளனர்.

மில்வாக்கி பகுதியில் வீடற்ற மூவர் பலியாகியுள்ளது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சிகாகோ, போர்ட்லாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செவ்வாய்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. 

தனியார் அமைப்பு 2,900-க்கும் அதிகமான விமான பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தின் மத்தியில் வெப்பநிலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய குளிர் அலை ஒன்று வடக்கு மற்றும் மத்தியமேற்கு பகுதி வழியாக வாரக் கடைசியில் தெற்கு நோக்கி செல்லும் எனக் கணிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com