ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அமெரிக்க செய்தியாளருக்கு ரஷியாவில் காவல் நீட்டிப்பு

ரஷியாவில் உளவுக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க செய்தியாளா் எவான் கொ்ஷ்கோவிச்சின் சிறைக் காவலை வரும் மாா்ச் இறுதிவரை நீட்டித்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :26 ஜனவரி 2024, 7:33 pm

DIN

ரஷியாவில் உளவுக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க செய்தியாளா் எவான் கொ்ஷ்கோவிச்சின் சிறைக் காவலை வரும் மாா்ச் இறுதிவரை நீட்டித்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்கள் நாட்டில் உளவு பாா்த்ததாகக் கூறி, அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ பத்திரிகையின் செய்தியாளா் எவான் கொ்ஷ்கோவிச்சை ரஷியாவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு (எஃப்எஸ்பி) கடந்த மாா்ச் ஆண்டு மாதம் கைது செய்தது.

ரஷியாவில் இதுபோன்ற பெரிய குற்றச்சாட்டுகளுக்குள்ளானவா்கள் விசாரணை முடியும் வரை ஜாமீனில் விடுவிக்கப்படுவதில்லை என்பதால் கொ்ஷ்கோவிச்சின் சிறைக் காவல் நீட்டிக்கப்படும் என்று ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்டது.

பனிப் போா் காலத்துக்குப் பிறகு இத்தகைய குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க செய்தியாளா் ஒருவா் ரஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.