ஹமாஸ் கோரிக்கைகளை மறுத்த நெதன்யாகு: பேச்சுவார்த்தை முடங்கியதா?

இரு மாதக் காலத்துக்கான போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் ஹமாஸின் கோரிக்கைகளை மறுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர்.
மேற்கு கரைப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் கொன்றவர்களின் உடல்களை ஊர்வலமாக எடுத்து சென்ற பாலஸ்தீனர்கள் | AP
மேற்கு கரைப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் கொன்றவர்களின் உடல்களை ஊர்வலமாக எடுத்து சென்ற பாலஸ்தீனர்கள் | AP

ஹமாஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட முதன்மையான இரு கோரிக்கைகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மறுத்துள்ளார்.

இருதரப்புக்குமிடையே கத்தார், குவைத் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இருமாதங்களுக்கு போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றை முன்வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனீயே, ஒப்பந்தம் குறித்து தாங்கள் ஆலோசனை செய்வதாகவும் ஆனால் முதன்மையான கோரிக்கை இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து முற்றிலும் வெளியேற வேண்டும் மற்றும் 1,000 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

போரில் பலியான பாலஸ்தீனர்களை அடக்கம் செய்யும் காட்சி | AP
போரில் பலியான பாலஸ்தீனர்களை அடக்கம் செய்யும் காட்சி | AP

இதனை மறுத்த இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, இலக்குகள் எட்டப்படும் வரை போர் நிறுத்தம் கிடையாது. இஸ்ரேலின் இலக்கு ஹமாஸை வேரோடு அகற்றுவது எனத் தெரிவித்து இரு கோரிக்கைகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 26,700-ஐ கடந்துள்ள நிலையில் பன்னாட்டளவில் போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் உருவாகியுள்ளது.

ஹமாஸ் பிடியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவித்து அழைத்து வர இஸ்ரேல் நாட்டுக்குள்ளே அழுத்தம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com