உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்: 20க்கும் மேற்பட்டோர் பலி

உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
Photo | via AP
Photo | via AP
Published on
Updated on
1 min read

உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

உக்ரைனின் சுமி நகரத்தில் குருத்தோலை ஞாயிறுவைக் கொண்டாட உள்ளூர் மக்கள் கூடியிருந்தபோது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் நகரின் மையப்பகுதியைத் தாக்கின. இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

சுமி தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இரட்டை ஏவுகணைத் தாக்குதலில் 'டஜன் கணக்கானவர்கள்' கொல்லப்பட்டதையும் உறுதிப்படுத்தினார்.

சுமி நகரின் தற்காலிக மேயர் ஆர்டெம் கோப்சார் கூறியதாவது, பிரகாசமான குருத்தோலை ஞாயிறு அன்று, எங்கள் சமூகம் ஒரு பயங்கரமான சோகத்தை சந்தித்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, 20க்கும் மேற்பட்டோர் பலியானதாக எங்களுக்கு ஏற்கெனவே தெரியும் . இவ்வாறு அவர் சமூக ஊடகங்களின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து 3 நாள்களில் 3.32 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

அதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே தொடரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா இரு நாடுகளிடமும் பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.

இந்தச் சூழலிலும் ரஷியா மீது உக்ரைனும் அந்த நாட்டின் மீது ரஷியாவும் தங்களது தாக்குதலைத் தொடா்ந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com