
கீவ்: ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தனர்.
சுமி நகரில் குருத்தோலை ஞாயிறன்று தேவாலயத்துக்கு வழிபாட்டுக்கு சென்றோரைக் குறிவைத்து ரஷியாவிலிருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிரிழப்பு 31-ஆக உயர்ந்துள்ளது.
உக்ரைனின் சுமி நகரத்தில் குருத்தோலை ஞாயிறுவைக் கொண்டாட உள்ளூர் மக்கள் கூடியிருந்தபோது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் நகரின் மையப்பகுதியைத் தாக்கின. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் இந்த தாக்குதலை ஐரோப்பிய தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை அவர்கள் பதிவு செய்திருக்கும் அதேவேளையில், உக்ரைன் போரை விரவில் முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியுள்ளனர்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. சுமார் 3 ஆண்டுகளாகியும் உக்ரைனில் அழுகுரல் இன்னும் ஓய்ந்தபாடில்லை...