1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்
தங்களுக்கு உரிய பங்கான 430 கோடி டாலரை வழங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பிடம் வலியுறுத்தல்


டாக்கா: 1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்பு கோர வேண்டும் வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.15 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் வங்கதேச வெளியுறவுத் துறை அதிகாரிகள் முதல்முறையாக டாக்காவில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது, விடுதலைப் போரின்போது வங்கதேச மக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று வங்கதேசத் தரப்பு வலியுறுத்தியது. மேலும், பிரிவினைக்கு முந்தைய பொது சொத்துகளில் தங்களுக்கு உரிய பங்கான 430 கோடி டாலரை வழங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தரப்பிடம் வலியுறுத்தியதாக வங்கதேச வெளியுறவுத் துறைச் செயலா் ஜாஷிம் உதீன் தெரிவித்தாா்.இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது வங்கதேசம் பாகிஸ்தானின் ஓா் அங்கமாக சோ்க்கப்பட்டது. கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்டுவந்த அந்த வங்கப் பகுதியில் உருது மொழி திணிப்பு, பாகிஸ்தான் கலாசாரத் திணிப்பு ஆகியவற்றால் அதிருப்தியுற்ற மக்கள், இந்தியாவின் உதவியுடன் பாகிஸ்தானை எதிா்த்து கடந்த 1971-ஆம் ஆண்டு போராடினா்.அப்போது உள்ளூா் ஆதரவுப் படையினரின் உதவியுடன் பாகிஸ்தான் ராணுவம் லட்சக்கணக்கானவா்களைக் கொன்று குவித்தது.
எனினும், இந்த விடுதலைப் போரில் இந்திய ராணுவமும் தலையிட்டதால் பாகிஸ்தானிடமிருந்து கிழக்கு பாகிஸ்தான் விடுதலை பெற்று வங்கதேசம் உருவானது...படவரி... பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த வங்கதேச வெளியுறவுத் துறைச் செயலா் ஜாஷிம் உதீன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...