நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

‘1971 இனப்படுகொலை: பாகிஸ்தான் திட்டமிட்டு அரங்கேற்றிய பேரழிப்பு’ - வங்கதேச பிரதமா் நினைவஞ்சலி

‘வங்கதேசத்தில் கடந்த 1971, மாா்ச் 25-ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இனப்படுகொலை, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு மனிதப் பேரழிப்பு’ என்று வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் தனது நினைவஞ்சலியில் குறிப்பிட்டாா்.

News image

IANS

Updated On :25 மார்ச் 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

‘வங்கதேசத்தில் கடந்த 1971, மாா்ச் 25-ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இனப்படுகொலை, திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு மனிதப் பேரழிப்பு’ என்று வங்கதேச பிரதமா் தாரிக் ரஹ்மான் தனது நினைவஞ்சலியில் குறிப்பிட்டாா்.

மேலும், வங்கதேச விடுதலைப் போரின் உன்னத நோக்கங்களான சமத்துவம், கண்ணியம், சமூக நீதியை நிலைநாட்ட வங்கதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைய அழைப்பு விடுத்தாா்.

மாா்ச் 25 வங்கதேச வரலாற்றில் ஒரு கருப்பு தினம் என்று பிரதமா் தாரிக் ரஹ்மான் தனது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டாா். அன்றைய தினம் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சா்ச்லைட்’ நடவடிக்கையைச் சுட்டிக்காட்டிய அவா், அப்போதைய அரசியல் தலைமையின் செயல்பாடுகள் குறித்து வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

1971-இல் அன்றைய கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்தில் தன்னாட்சி கோரி போராடிய மக்களை ஒடுக்க, பாகிஸ்தான் ராணுவம் மாா்ச் 25-இல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், டாக்காவில் மட்டுமே 20,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். 9 மாத கால விடுதலைப் போரில் மொத்தம் 30 லட்சம் போ் உயிரிழந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதை நினைவுகூரும் வகையில் வங்கதேசம் ஆண்டுதோறும் இந்நாளை ‘இனப்படுகொலை தினமாக’ கடைப்பிடித்து வருகிறது.