கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி!

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் முக்கிய அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலியானது குறித்து...
கானாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முக்கிய அமைச்சர்கள் பலி...
கானாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முக்கிய அமைச்சர்கள் பலி...எக்ஸ்
Published on
Updated on
1 min read

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து, இன்று (ஆக.6) காலை 9.12 மணியளவில் (உள்ளூர் நேரப்படி), அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு, ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டரில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் 2 பேர் உள்பட 8 பேர் பயணித்ததாகக் கூறப்படும் நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களில், அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள வனப்பகுதியில், அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், கானாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா முஹம்மது உள்பட அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 8 பேரும் பலியானதாக, அந்நாட்டு அரசின் செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

இதையும் படிக்க: சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

Summary

Eight people, including two of the country's ministers of defense and environment, have been killed in a helicopter crash in the West African country of Ghana.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com