
சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சூவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், 10-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், 33 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்சூ மாகாணத்தின், யூஸாங் மாவட்டத்தில், நேற்று (ஆக.7) முதல் தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள லான்ஸோ நகரத்தின் அருகிலுள்ள மலைப் பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் வசித்த சுமார் 10 பேர் பலியானதாகக் கூறப்படும் நிலையில், 33 பேர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து, மாயமானவர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, கனமழையால், ஸிங்லாங் மலைப் பகுதியில், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.
இதனால், 4 கிராமங்களைச் சேர்ந்த 4,000-க்கும் அதிகமான மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பருவமழை தொடங்கியது முதல் சீனாவின் பல்வேறு மாகாணங்களின் பகுதிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ராணுவத்தால் காஸாவை கட்டுப்படுத்த இஸ்ரேல் திட்டம்! ஐ.நா. எதிர்ப்பு!
Flash floods in China's northwestern province of Gansu have killed more than 10 people and left 33 missing.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.