
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் பற்றிக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி நள்ளிரவு 1:20 மணிக்கு நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில், 18 வயது இளம் பெண், 65 வயது முதியவர், 19 வயது இளைஞர் என மூவர் படுகாயமுற்றனர்.
மேலும், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக, 17 வயது சிறுவன் ஒருவனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியிடப்படாத சூழலில், இச்சம்பவம் குறித்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு (ஆகஸ்ட் 3 வரை) மிகக் குறைவான துப்பாக்கிச் சூடு சம்பவங்களே நியூயார்க் நகரில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கடந்த 2024-ம் ஆண்டை விட நிகழாண்டில் (2025) 23 சதவீதம் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லியில் கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.