டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
டிரம்ப் - புதின்
டிரம்ப் - புதின்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், 3 ஆண்டுகளுக்கும் மேலாகவே இரு நாடுகளும் போரில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். முன்னதாக, போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில், உக்ரைன் ஒப்புக்கொண்ட போதிலும், அதனை ரஷியா தட்டிக் கழித்து வந்தது.

இதனிடையே, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். ரஷியாவிடம் அதிகளவில் எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 50 சதவிகித வரியையும் விதித்தார்.

இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமையில் (ஆகஸ்ட் 15) அலாஸ்காவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவிருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், டிரம்ப்புடனான சந்திப்பு குறித்து ரஷியாவின் தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் பெறப்படவில்லை.

இதனிடையே, ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமையில் தொலைபேசியில் உரையாடினார். உக்ரைன் போர் குறித்து இருவரும் விவாதித்த நிலையில், 23-ஆவது வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டுக்கும் புதினை பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்த பயணம் இறுதி செய்யப்பட்டவுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி தேவைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு! காரணம் டிரம்ப் அல்ல; தள்ளுபடிதான்!

Summary

Donald Trump says he will meet Putin on Aug 15 in Alaska

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com