இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்பு! - அதிபர் டிரம்ப்

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்படைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதைப் பற்றி...
புதின் - டிரம்ப்
புதின் - டிரம்ப்
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கான வரிவிதிப்பால் ரஷிய பொருளாதாரம் கடும் பாதிப்படைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் எச்சரிக்கையும் மீறி, ரஷியாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கியதன் விளைவாக இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக கடந்த புதன்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்த வரி விதிப்பினால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, காலணி உள்ளிட்ட பொருள்களுக்கு பெரிதும் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் பாதிப்பு இந்தியாவுக்கு மட்டுமின்றி ரஷியாவையும் கடுமையாக பாதித்துள்ளது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், “ரஷியா மீண்டும் தங்கள் நாட்டைக் கட்டியெழுப்பத் தொடங்க வேண்டும். ஆனாலும், அந்த நாடு சிறப்பாகச் செயல்பட மிகப்பெரிய ஆற்றல் வளத்தைக் கொண்டிருக்கிறது.

ஆனால், தற்போது ரஷ்ய பொருளாதாரம் சிறப்பாக இல்லை. இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிவிதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷியா ஒரு மிகப்பெரிய நாடு. அங்கு 11 விதமான நேர அமைப்புகள் இருப்பதாக நினைக்கிறேன். உங்களால் நம்ப முடிகிறதா... நிலத்தின் அடிப்படையில் பார்த்தால் ரஷியா மிகப்பெரிய நாடுதான்” எனத் தெரிவித்தார்.

Summary

Trump says India tariffs hit Russian economy hard: 'That was a big blow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com