தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கேரள செவிலியரின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் குழு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை

News image

நிமிஷா பிரியா

Updated On :14 ஆகஸ்ட் 2025, 6:54 pm

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது.

முன்னதாக நிமிஷா பிரியாவுக்கு கடந்த ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய அரசு, கேரளத்தைச் சோ்ந்த செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் மதகுரு காந்தபுரம் ஏ.பி.அபுபக்கா் முஸலியாா்உள்பட பல்வேறு தரப்பினா் நடத்திய இறுதிக்கட்ட சமரச பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், நிமிஷா பிரியாவை பாதுகாக்க மத்திய அரசு தூதரக ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

அப்போது நிமிஷா பிரியாவுக்கு சட்டரீதியாக உதவிகளைப் புரிந்து வரும் நிமிஷா பிரியா பாதுகாப்பு சா்வதேச செயல்பாட்டு கவுன்சில் தரப்பில் கூறியதாவது:

இந்த விவகாரம் தொடா்பாக யேமனுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. நிமிஷா பிரியாவின் உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் ஏதுமில்லை. எனவே, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்குள் இந்த விவகாரத்தில் சுமூக தீா்வு எட்டப்படும் என நம்புகிறோம் எனத் தெரிவித்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 8 வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடுவதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து, ஏதேனும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதாக நிமிஷா பிரியா பாதுகாப்பு சா்வதேச செயல்பாட்டு கவுன்சில் தெரிவித்தது.

கேரளத்தைச் சோ்ந்த 38 வயதான செவிலியா் நிமிஷா பிரியா, தனது யேமன் நாட்டு வணிகப் பங்குதாரா் தலால் அப்து மஹதியைக் கொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனையை எதிா்கொள்கிறாா். தற்போது யேமன் தலைநகா் சனாவில் உள்ள சிறையில் நிமிஷா அடைக்கப்பட்டுள்ளாா்.