டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்பு உயர்வு!

அமெரிக்கா டாலர் மதிப்பைவிட ஜப்பான், இங்கிலாந்து கரன்சி மதிப்பு வளர்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்கோப்புப் படம்
Updated on
1 min read

அமெரிக்கா டாலர் மதிப்பைவிட ஜப்பான், இங்கிலாந்து கரன்சி மதிப்பு வளர்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்கா மீது பல்வேறு நாடுகளும் அதிக வரி விதிப்பதாகக் கூறி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரியை அறிவித்தார். மேலும், இந்த வரி விதிப்பு நடவடிக்கை மூலம் அமெரிக்க கருவூலத்துக்கு அதிகளவில் நிதி கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகள் மீது வரி விதிக்கப்பட்ட நிலையில், நட்பு நாடான ஜப்பான் மீதும் 15 சதவிகித வரியை அறிவித்தார். இந்த நிலையில், ஜப்பான் கரன்சியான யென் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்த மதிப்பு உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், டிரம்ப்பின் வரி விதிப்பும் முக்கிய காரணமாகக் கொள்ளப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிராக யென் 0.4 சதவிகிதமும், யூரோ 0.25 சதவிகிதமும், இங்கிலாந்தின் பவுண்டு 0.20 சதவிகிதமும், ஆஸ்திரேலிய டாலர் 0.2 சதவிகிதமும் வளர்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக, அந்நாட்டில் முதலீடுகள் குறைந்ததுடன், அமெரிக்க டாலரைவிட தங்கம் மற்றும் மற்ற கரன்சி மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இங்கிருந்துதான், டாலர் மதிப்பு சரியத் தொடங்கியது எனலாம்.

முதலீடுகள் குறைந்ததால், பணவீக்கம் அதிகரித்தது. இதனால், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. வட்டி விகிதம் அதிகமாக இருந்தால்தான் முதலீடுகள் வரப்பெறும். இதுவே, சங்கிலித் தொடர்போல டாலர் மதிப்பை பின்னோக்கித் தள்ளத் தொடங்கியுள்ளன.

அதுமட்டுமின்றி, அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா, ரஷியா மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சியாலும், அவர்கள் சொந்த கரன்சியை பயன்படுத்துவதாலும் அமெரிக்க டாலர் சரிந்தது எனலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com