ரஷியாவில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி, 130 பேர் காயம்

ரஷியாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் பலியாகினர்.
Fire at Russian industrial plant kills 11, injures 130
தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை. Photo credit: AP
Published on
Updated on
1 min read

ரஷியாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் பலியாகினர்.

மாஸ்கோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எலாஸ்டிக் ஆலையில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். மேலும் 130 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 29 பேர் சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

13 பேர் ரியாசனிலும் 16 பேர் மாஸ்கோவில் உள்ள மருத்துவ மையங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். ரஷிய அரசு செய்தி நிறுவனமான ரியா நோவோஸ்டி படி, அந்த நிலையத்தில் உள்ள துப்பாக்கி குண்டு பட்டறையில் தீப்பிடித்து பின்னர் வெடிப்பு ஏற்பட்டது. இருப்பினும் தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையில் இறங்கியுள்ளனர்.

இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பாஜகவுடன் இல்லை! -பிரசாந்த் கிஷோர்

இதனிடையே தீ விபத்து காரணமாக ரியாசன் பகுதியில் திங்கள்கிழமை ஒரு நாள் துக்க அனுசரிக்கப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் அறிவித்தனர். நான்கு ஆண்டுகளுக்குள் எலாஸ்டிக் ஆலையில் நடந்த இரண்டாவது பயங்கர விபத்து இதுவாகும். கடந்த 2021ஆம் ஆண்டு வெடிபொருள்களை உற்பத்தி செய்யும் ரஸ்ரியாட் பட்டறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 பேர் பலியாகினர்.

Summary

A fire at an industrial plant in Russia's Ryazan region on Friday killed 11 people and injured 130, Russian officials said Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com