
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் அமைந்துள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸான் வார்சாக் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு நேற்று (ஆக.21) தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் நேற்று நள்ளிரவு திடீரென தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில், 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 4 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியைக் கைபற்றிய பாதுகாப்புப் படையினர் அங்கு பாகிஸ்தானின் தேசிய கொடியை ஏற்றியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேபோல், பன்னூ மாவட்டத்தில் ஓய்வுப் பெற்ற பாகிஸ்தான் ராணுவ வீரரான அடாவுல்லா என்பவரை கடத்த முயன்ற, ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் அவரைக் கொலைச் செய்துவிட்டு தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 5.5 கோடி விசாக்கள் மறுபரிசீலனை: அமெரிக்கா அறிவிப்பு! இந்தியர்கள் மட்டும் 50 லட்சம் பேர்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.