உங்களை ஏன் பணியமர்த்த வேண்டும்? நேர்காணல் கேள்விகளுக்கு பதில் சொல்லும் பில் கேட்ஸ்

உங்களை ஏன் பணியமர்த்த வேண்டும்? என்ற முக்கியமான நேர்காணல் கேள்விக்கு பதில் சொல்லிக்கொடுக்கிறார் பில் கேட்ஸ்.
பில் கேட்ஸ்
பில் கேட்ஸ்
Published on
Updated on
2 min read

மிகத் திறமையான இளைஞர்கள்கூட, வேலைக்கான நேர்காணலின்போது கேட்கப்படுத் மிகப்பொதுவான கேள்விகளுக்கு என்னவென்று பதில் சொல்லத் தெரியாமல் தவிப்பார்கள்.

தனது இளமைக் காலத்தில் எண்ணற்ற நேர்காணல்களிடம் இடம்பெற்றிருப்பவரும், தற்போது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பலரை நேர்காணல் எடுத்திருப்பவருமான மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், நேர்காணல்களில் கேட்கப்படும் சில முக்கிய கேள்விகளுக்கு என்ன பதிலளிப்பது என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு நேர்காணலில், உங்களை ஏன் பணியமர்த்த வேண்டும் என்று கேள்வி வந்தால், அதற்கான பதில் பெருமைப்பேசுவதாக இல்லாமல், உங்களது மதிப்பை வெளிப்படுத்தும் வகையிலும், அந்த நிறுவனம் உங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் புரியவைக்கும் வகையில் பதிலளிக்க வேண்டும் என்கிறார் பில் கேட்ஸ்.

நிறுவனத்தின் மேலாளர்களை நியமிப்பது, வெறும் ஊழியர்களை பணியமர்த்த மட்டுமல்ல, ஒரு நிறுவனத்தின் கொள்கை மற்றும் சவால்களுடன், நேர்காணலுக்கு வரும் இளைஞர்களின் மனநிலை எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதை அவர்கள் கண்டறிய வேண்டும்.

எனவே, இதுபோன்ற கேள்விகளுக்கு வெறுமனே, நான் கடின உழைப்பாளி, நான் குழுவாகச் செயல்படுவேன் என்பது போன்ற பதில்களைச் சொல்லாமல், ஒரு பணிக்கு, நிறுவனம் தேடும் நபரின் சிறப்பம்சம் என்ன என்பதைக் கண்டறிந்து குறிப்பிட்டு அதனை நுட்பமாக வெளிப்படுத்துங்கள்.

ஆரம்பத்தில், நான் நேர்காணல்களில் பங்கேற்றபோது, நான் கோடிங் நன்றாக செய்வேன், மென்பொருள் துறையில் ஈடுபாடு அதிகம் குழுவாக இணைந்து செயல்படும் திறன் பெற்றிருக்கிறேன் எனபது போன்ற பதில்களைச் சொன்னதாகவும், ஆனால், அதையெல்லாம் பிறகு மாற்றிக் கொண்டதாகவும் கூறுகிறார்.

நிறுவனத்தின் தேவையையும், உங்களது திறமையையும் நேரடியாகத் தொடர்புப்படுத்திப் பேசுங்கள். அந்தப் பதவியை மெருகேற்றுவதற்கு உங்களிடம் இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துங்கள். இப்போதிருக்கும் சவால் மட்டுமல்மல், நீண்ட கால பிரச்னைகள், எதிர்கால பிரச்னைகளையும் சொல்லி அதற்கான தீர்வுகளைப் பேசுங்கள் என்கிறார்.

உங்கள் பலமும், பலவீனமும் என்ன? என்ற கேள்வி, சுய தம்பட்டத்துக்கு பதிலாக, சுயப் பரிசோதனையாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் முன்பு பணியாற்றிய நிறுவனத்தில் இருந்த சவால்களை, எவ்வாறு திறமையாகக் கையாண்டீர்கள் என்று சொல்லலாம். பலவீனம் பற்றி பேசும்போது, எந்த திறமைகளை வளர்க்க வேண்டும், எந்த திறமையை வளர்ப்பதில் சவாலைச் சந்திக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகவே சொல்லலாம் என்கிறார்.

இது, ஒருவரது பக்குவம், கற்கும் ஆர்வம் போன்றவற்றை அதிகரிக்கச் செய்யும் என்கிறார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் எப்படி இருப்பீர்கள்? என்ற கேள்விக்கு, உண்மையில் நாம் எப்படி இருப்போம் என்பதை கணித்துச் சொல்லாமல், எப்படி இருக்க வேண்டும் என்று இலட்சியம் வைத்திருக்கிறோம் என்பதைச் சொல்லலாம். ஒரு ஊழியருக்கு வளர்ச்சிக்கான ஊக்கம் இருக்கிறதா என்பதை நிறுவனம் எதிர்பார்க்கும்.

நீங்கள் நேர்காணலுக்கு வந்திருக்கும் நிறுவனத்துடன் ஒட்டிய, உங்கள் வளர்ச்சியை விவரித்துச் சொல்லலாம் என்கிறார் பில் கேட்ஸ்.

என்ன ஊதியம் எதிர்பார்க்கிறீர்கள்? என்பது நிச்சயம் ஒரு சாமர்த்தியமான கேள்வி. உங்களது தன்னம்பிக்கை உள்ளிட்டவற்றை பரிசோதிக்கும். சற்றுக் குறைவான ஊதியத்தை சொல்லிவிட்டால், உங்களை நீங்களை குறைவாக மதிப்பிடுவதாகக் காட்டிவிடும். எனவே, முன்கூட்டியே அந்த வேலைக்கான சராசரி ஊதியம் பற்றி அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப பதிலளிக்கலாம் என்கிறார்.

சில வழக்கமான கேள்விகள், ஒருவரின் லட்சியம், மிகச் சிறந்த குணங்களை வெளிப்படுத்துவதாக இருக்கும். எனவே, அதுபோன்ற கேள்விகளுக்கு சற்று அதிக கவனம் செலுத்தி பதிலளியுங்கள்.

ஒரு பதிலை அளிக்கும்போது, அதில் அதிக தன்னம்பிக்கையும் சற்று எதிர்பார்ப்பும் கொண்டதாக வெளிப்படுத்துங்கள். ஒருவர் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை மட்டும் வெளிப்படுத்தாமல், என்ன செய்ய விரும்புகிறார் என்பதையும் வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம் என்கிறார் பில் கேட்ஸ்.

Summary

Bill Gates answers the important interview question Why should we hire you?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com