காஸாவில் பட்டினிச் சாவு 300-யை எட்டியது! 117 பேர் குழந்தைகள்!!

காஸாவில் உணவு பஞ்ச நிலை பற்றி...
Gaza Malnutrition related deaths cross 300
ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுடன் தாய்...AP
Published on
Updated on
2 min read

காஸாவில் பட்டினிச் சாவு 300-யை எட்டியுள்ளது. மேலும் இஸ்ரேல் ராணுவத்தினரால் இன்று 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

காஸா மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களை ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் வழங்கி வந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு தடை விதித்ததல் அங்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.

AP

உணவு கிடைக்காமல் குழந்தைகள் உள்பட பலரும் செத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக உணவு மையங்களை நோக்கிச் செல்லும் மக்களையும் இஸ்ரேல் ராணுவம் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகிறது.

காஸாவில் உணவு, மருத்துவம் இன்றி மக்கள் தவித்து வருவதாக கவலை தெரிவித்துள்ள ஐ.நா. அங்கு பஞ்ச நிலையையும் அறிவித்துள்ளது.

இந்த பஞ்சம் இயற்கைப் பேரிடரால் உருவாக்கப்பட்டதில்லை, முழுக்க முழுக்க மனிதா்களால் உருவாக்கப்பட்டது என்றும் இதனை உடனடியாக நிறுத்தி மாற்றியமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

உணவு வழங்கும் மையத்தில்...
உணவு வழங்கும் மையத்தில்...AP

இஸ்ரேலில் உணவின்றி பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உள்பட இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 11 பேர் இறந்துள்ளதாகவும் இதுவரை குழந்தைகள் மட்டும் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 117 பேர் இறந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

போதிய உணவுகளை வழங்கினால் குழந்தைகள் உயிரிழப்பதை நிறுத்த முடியும் என்று அங்குள்ள மருத்துவர் ஒருவர் கூறுகிறார்.

உணவு எடுத்துச் செல்லும் காஸா  மக்கள்...
உணவு எடுத்துச் செல்லும் காஸா மக்கள்...AP

கான் யூனிஸ் பகுதியில் உள்ள நாஸர் மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவத்தினர் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் இறந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 200 பத்திரிகையாளர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் காஸா நகரில் உணவு சேகரித்துக் கொண்டிருந்தவர்கள் உள்பட 14 பேர் இன்று இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

Summary

Gaza's Malnutrition related deaths cross 300

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com