
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது உக்ரைன் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதல் காரணமாக, சுத்திகரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு ரஷியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பல உலக நாடுகளுக்கும் எரிபொருள் ஏற்றுமதியில் முன்னிலையில் இருக்கும் ரஷியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
சர்வதேச அளவில், எரிபொருள் ஜாம்பவானாக தன்னைக் கருதி வந்த ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைக் குறிவைத்து உக்ரைன் நடத்தும் டிரோன் தாக்குதல்களால், ஒரே வாரத்தில், அந்த நாட்டு மக்கள் ஒரு வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப முடியாமல் அல்லாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ரஷியாவின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இல்லை என்ற வாகனம்தான் தென்படுகிறது. எரிபொருள் வழங்கப்படும் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருந்து எரிபொருள் நிரப்பிச் செல்கிறார்கள்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவே உக்ரைன் கூறி வரும் நிலையில், ரஷியாவுக்கு எதிராக மிக சாதுர்யமாக காய் நகர்த்தி வருகிறது.
ரஷியாவின் எரிபொருள் உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டால், மாஸ்கோவுக்கு நெருக்கடி ஏற்படும் என்பதால், எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமே அதன் இலக்காக உள்ளது.
அதுவும் குறிப்பாக ரஷியாவின் புறநகர்ப் பகுதிகளில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. உக்ரைனின் டிரோன் தாக்குதலால், ரஷியாவின் 17 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது, நாள் ஒன்றுக்கு 1.1 மில்லியன் பாரல் உற்பத்திக்குச் சமம்.
கடந்த 24அம் தேதி வரை, உக்ரைன், ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான், ரையாசன் - மாஸ்கோ எரிபொருள் குழாய் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல்.
டிரோன்கள் என்றால், ஒன்றன் பின் ஒன்றாக பறந்து வந்து தாக்குதல் நடத்தப்படுவதாகவும், எதையும் தடுக்கவும் முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க... பொறியியல் கலந்தாய்வு: கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை! 81% மாணவ சேர்க்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.