
உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பலை, ட்ரோன் தாக்குதலின் மூலம் மூழ்கடித்ததாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியாவின் கடற்படை ட்ரோன் தாக்குதலின் மூலம், உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பலான சிம்ஃபெர்போல் தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் ஒடெசா பகுதியில் அமைந்துள்ள டானூப் நதியின் டெல்டா பகுதியில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதுதான் ரஷிய கடற்படை ட்ரோன்களின் முதல் வெற்றிகரமான தாக்குதல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலை, உக்ரைனின் கடற்படை செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். மேலும், இதில் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உக்ரைன் கடற்படையில் இணைக்கப்பட்ட கப்பல்களில் சிம்ஃபெர்போல்தான், மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.