
டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையை எதிர்த்து, இதுதான் மாற்றத்துக்கான நேரம் (This is our Turning Point) என்ற பதாகைகளுடன் ஸ்டேட் ஃபார்ம் திடலில் மக்கள் பேரணி (செப். 21). டர்னிங் பாயிண்ட் என்ற இளைஞர் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் சார்லி கிர்க்.
2025-ல் வாஷிங்டனில் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு முந்தைய நாள் (ஜன. 19) நிகழ்ச்சியில் நடனமாடிய டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி சந்தித்து, ரஷியா - உக்ரைன் போர் குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார். ஸெலென்ஸ்கியின் உடை குறித்து முந்தைய பேச்சுவார்த்தையில் டிரம்ப் அறிவுறுத்தியதால், ஸெலென்ஸ்கி இம்முறை (ஆக. 18) கோட் சூட் அணிந்து வந்தார்.
2025-ல் நியூ யார்க் மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஸோரன் மம்தானியை அரவணைத்த ஆதரவாளர்கள்
2025-ல் நியூ யார்க் நகரக் கணக்காளர் பிராட் லேண்டரை கூட்டாட்சி குடிவரவு நீதிமன்றத்துக்கு வெளியே (ஜூன் 17) கைது செய்த குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை, எஃப்பிஐ (FBI).
நியூ யார்க்கில் லஞ்ச வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டபின், நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய அமெரிக்க முன்னாள் செனட்டர் பாப் மெனண்டெஸ் (ஜன. 29).
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிரான சோதனையைக் கண்டித்து, லாஸ் ஏஞ்சலீஸில் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம், வன்முறையாக மாறியது.
2025-ல் கலிபோர்னியா மாகாணத்தில் அல்டடேனாவில் ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயிலிருந்து மீட்கப்பட்ட முதியோர்.
கலிபோர்னியா காட்டுத் தீயில் பற்றியெரிந்து கருகிய எரிந்த வீடுகளின் மத்தியில் பேருந்து ஒன்று சென்றபோது..
கலிபோர்னியா மாகாணத்தின் அல்டடேனாவில் பரவிய காட்டுத் தீயால் சேதமடைந்த வணிக வளாகம்.
லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் மத்திய பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு எதிரான அரசின் சோதனை நடவடிக்கையைக் கண்டித்து போராட்டம் நடத்தியோர்.
அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டபோது..
அமெரிக்காவில் கூட்டாட்சி சட்ட அமலாக்க நடவடிக்கையின்போது, வாஷிங்டனின் வடமேற்கு பகுதியில் ஒருவரை போலீஸார் கைது செய்தபோது..
2025-ல் மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு அஞ்சலி செலுத்திய அவரது உளவு அமைப்பு அதிகாரி (ஜன. 4).
கலிபோர்னியா மாகாணம், டுவோலும்னே கவுன்டி அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பற்றியெரிந்த வீட்டை அணைக்கும் பணியில் ஈடுபட்டோர்.
2025-ல் அமெரிக்காவின் பீனிக்ஸ் மெட்ரோ பகுதியருகே (ஆக. 25) ஏற்பட்ட தூசு மண்டலம்.
தி செயின்ட் ஜோசப் தி வுட்வொர்க்கர் ஆலயத்தின் பின்னே தோன்றும் (நவ. 11) வட துருவ ஒளி (Northern Lights - நார்த்தர்ன் லைட்ஸ்).
அமெரிக்காவின் டிப்டான் நகரத்தின் ஓக்லாவில் பெய்த புயலுடன்கூடிய மழை (ஜூன் 3).
ஆர்லிங்டனில் ராணுவ ஹெலிகாப்டரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் மோதிய விபத்தில் பலியான 67 பேரின் நினைவிடத்தில் அஞ்சலி (பிப். 1).
டெக்ஸாஸ் மாகாணத்தின் கெர்வில்லில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் தற்காலிக நினைவிடத்தில் சிலுவையுடன் அஞ்சலி.
கலிபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாவில் உள்ள அல்கட்ராஸ் தீவில் உள்ள மோசமான குற்றவாளிகளுக்கான சிறை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.