கனடாவிலிருந்து இந்தியர்களை அமெரிக்காவுக்குக் கடத்த சர்வதேச அளவில் சதி! பெண் மீது வழக்குப்பதிவு

சர்வதேச அளவில் ஆள் கடத்தல் - அமெரிக்க பெண் மீது வழக்குப்பதிவு பற்றி...
அமெரிக்க வெள்ளை மாளிகை
அமெரிக்க வெள்ளை மாளிகைஏஎன்ஐ
Updated on
1 min read

கனடாவிலிருந்து இந்தியர்களை அமெரிக்காவுக்கு ஆள்கடத்த சர்வதேச அளவில் சதித்திட்டம் தீட்டிய பெண் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

கனடாவிலிருந்து 4 இந்தியர்கள் உள்பட மொத்தம் ஐந்து பேர் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த விவகாரம் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிய வந்ததையடுத்து, அமெரிக்காவுக்குள் இந்தியர்கள் சட்ட விரோதமாக நுழைய டெய்லர் என்ற நியூயார்க் பெண் உதவியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அதன்பேரில், கடந்த ஜனவரியில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சர்வதேச அளவில் ஆள் கடத்தலில் ஈடுபடும் கும்பலுடன் அவருக்கு தொடர்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், டெய்லர் மீதான குற்றச்சாட்டு நிரூபனமானால் அவருக்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை உறுதி என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில், கனடாவிலிருந்து ஆள் கடத்தப்பட்ட இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தது எப்படி? அவர்களின் வொவரங்கள் உள்ளிட்ட விரிவான பல தகவல்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

Summary

A 42-year-old woman has been charged for her role in an international smuggling conspiracy under which individuals primarily from India were brought illegally to the US across the border from Canada.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com