

ஜப்பானின் வடக்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் இன்று (டிச. 8) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.5 அலகுகளாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் சுனாமி ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் வடக்கு கடற்கரையோரப் பகுதிகளில் 7.5 ரிக்டர் அளவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு ஜப்பானில் உள்ள மிசாவா நகரத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கே 73 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 10 மீட்டர் ஆழத்தில் சுனாமி ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த சுனாமியானது ஜப்பானின் வடக்கே உள்ள ஹொக்கைடோ தீவில் உள்ள உரக்வா பகுதியில் இருந்து அமோரி நகரத்தின் முட்சு ஒகவாரா வரை ஏற்படக் கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக அவசர செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமோரி பகுதியில் விடுதியில் தங்கியிருந்த பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.
நடப்பாண்டு ஜூலையில் தென்மேற்கு ஜப்பானில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் நேர்ந்து பெரும் சேதங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பாகிஸ்தானில் இந்தோனேசிய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.