பாகிஸ்தானில் இந்தோனேசிய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

75வது ஆண்டு நட்புறவில் பாகிஸ்தான்-இந்தோனேசியா உறவை வலுப்படுத்தும் முக்கிய சந்திப்பு..
இந்தோனேசிய அதிபருக்கு வரவேற்பு
இந்தோனேசிய அதிபருக்கு வரவேற்பு x.com
Updated on
1 min read

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ இரண்டு நாள் பயணமாகப் பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள இந்தோனேசிய அதிபர் சுபியந்தோவை நூர் கான் விமான நிலையத்தில் பாகிஸ்தான் அதிபர் ஆசீப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் ஆகியோர் வரவேற்றனர். மேலும் பாகிஸ்தானின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழுவும் அவரை வரவேற்றனர்.

பாகிஸ்தானுக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையேயான உறவானது 75வது ஆண்டு நிறைவையொட்டி அவரது வருகை சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.

வெளியுறவு அலுவலகத்தின்படி, அதிபர் சுபியந்தோவுடன் பிரதமர் ஷெஹ்பாஸ் பேச்சுவார்த்தைகளை நடத்துவார். மேலும் அவர் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியுடன் கலந்துரையாடுவார்.

ராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைத் தலைவருமான பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், இந்தோனேசிய அதிபரைச் சந்திப்பார்கள். .

பாகிஸ்தான்-இந்தோனேசியா உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், காலநிலை, கல்வி மற்றும் கலாசாரம் உள்ளிட்ட புதிய ஒத்துழைப்பு வழிகளை ஆராய்வதையும், பிராந்திய மற்றும் உலகளவில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் குறித்து இருதரப்பினரும் விவாதிப்பார்கள்.

இந்தோனேசியாவிலிருந்து பாகிஸ்தானுக்குக் கடைசியாகக் கடந்த 2018ல் அதிபர் ஜோகோ விடோடோவால் வருகை தந்திருந்தார்.

Summary

Indonesian President Prabowo Subianto arrived here on Monday on his maiden two-day visit to Pakistan to deepen bilateral ties and explore new avenues of cooperation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com