

மொராக்கோ நாட்டின் 3 ஆவது மிகப் பெரிய நகரத்தில், நள்ளிரவில் திடீரென 2 வெவ்வேறு அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
மொராக்கோவின் ஃபெஸ் நகரத்தில், நேற்று (டிச. 9) இரவு இரண்டு வெவ்வேறு 4 அடுக்குமாடி கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், அந்தக் கட்டடங்களில் வசித்து வந்த 8 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கட்டடம் இடிந்து விழுந்ததில் 19 பேர் பலியானதுடன், 16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், திடீரென குடியிருப்புக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைகள் குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
ஏற்கெனவே, மொராக்கோவில் கடந்த மே மாதம் ஒரு கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். மேலும், பழமையான கட்டடங்கள் நிறைந்த அந்நாட்டில் கட்டடங்களின் கட்டுமானத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
இத்துடன், மொராக்கோவில் அரசு அதிகாரிகளின் ஊழல் மற்றும் முறைகேடுகளால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை எனக் குற்றம்சாட்டி அவ்வப்போது மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, வரும் 2030 ஆம் ஆண்டு நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை ஃபெஸ் நகரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தாய்லாந்து - கம்போடியா எல்லையில் மீண்டும் மோதல்! லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.