அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் பணிநீக்கம்!

ஸ்பெயின் நாட்டில் அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டதால் சர்ச்சை
பிரதிப் படம்
பிரதிப் படம்ENS
Updated on
1 min read

ஸ்பெயின் நாட்டில் அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 22 வயதான பெண் ஊழியர் ஒருவர், அலுவலகத்துக்கு காலை 7.30 மணிக்குச் செல்வதற்கு பதிலாக, முன்கூட்டியே 6.45 முதல் 7 மணிக்கே செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

பெண்ணின் முன்கூட்டிய வருகையை நிறுத்துமாறு, நிறுவன மேலதிகாரி எச்சரித்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே பெண்ணை அவர் எச்சரித்துள்ளார். இருப்பினும், அதற்குப் பின்னும் அவர் 19 முறை அதேபோல அலுவலகத்துக்கு முன்கூட்டியே வந்துள்ளார்.

இதன் காரணமாக, மேலதிகாரியின் அறிவுறுத்தல்களைப் புறக்கணிப்பதாகவும், அவரின் முன்வருகை நிறுவனத்துக்கு எந்தப் பங்களிப்பையும் அளிக்கவில்லை என்று கூறிய மேலதிகாரி, அலுவலகத்தில் கடுமையான தவறான நடத்தைக்காக பெண்ணை பணிநீக்கம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பணிநீக்க நடவடிக்கையால் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் பெண் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையின்போது, சில சமயங்களில் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்னதாகவே, அவர் நிறுவனத்தின் செயலி வழியாக வந்ததாகப் பதிவிட்டு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் நிறுவனத்தின் தரப்பில் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, நிறுவனத்தின் காரின் பேட்டரியை அனுமதியின்றி விற்றதாகவும் பெண் மீது நிறுவனம் குற்றம் சாட்டியது.

இதனையடுத்து, ஸ்பெயின் நாட்டின் தொழிலாளர் சட்டத்தின் 54 ஆவது பிரிவின்படி, பணியிட விதிகளைப் பின்பற்ற மறுப்பது கடுமையான மீறல் என்று தீர்ப்பளித்தது.

இதையும் படிக்க: அழகான முகம், துப்பாக்கியைப் போல உதடுகள்! அலுவலகப் பெண்ணை வர்ணித்த டிரம்ப்!

Summary

Female Worker fired from her job for turning up 40 minutes early

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com