ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம், சுனாமி அலைகள்! ரிக்டர் அளவில் 6.7 ஆகப் பதிவு!

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து...
ஜப்பானில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்... (கோப்புப் படம்)
ஜப்பானில் 6.7 ரிக்டர் நிலநடுக்கம்... (கோப்புப் படம்)AP
Updated on
1 min read

ஜப்பான் நாட்டின் வடக்கிழக்கு பகுதியில், ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சிறிய அளவிலான சுனாமி அலைகள் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின், அமோரி மாகாணத்தின் ஹோன்ஷூ பகுதியில், இன்று (டிச. 12) காலை 11.44 மணியளவில் 20 கி.மீ. ஆழத்தில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஜப்பானின் வானிலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஹொக்காயிடோ மற்றும் அமோரியின் கடல்பகுதியில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் உருவானதாகக் கூறப்படுகிறது. பின்னர், சுமார் 2 மணிநேரம் கழித்து அப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கைகள் விலக்கப்பட்டன.

ஏற்கெனவே, ஜப்பானில் கடந்த டிச.8 ஆம் தேதி 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் 2 அடி உயர சுனாமி அலைகள் உருவாகின. இத்துடன், 34 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஜப்பானில் நிலநடுக்கத்தின் பின்அதிர்வுகள் அல்லது மிகப் பெரியளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் (8 ரிக்டருக்கும் அதிகமாக) ஏற்படும் ஆபத்துள்ளதாக, ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காங்கோவில் 413 பேரைக் கொன்ற ருவாண்டா ஆதரவு ஆயுதக்குழு!

Summary

A small tsunami wave has been reported to have been generated by an earthquake in northeastern Japan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com