

பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2 நாள்களில் மட்டும் 10,000 ஆப்கன் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் தஞ்சமடைந்த லட்சக்கணக்கான ஆப்கன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில், அந்நாடுகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஈரானிலிருந்து கடந்த வியாழன் (டிச.11) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 1,939 குடும்பங்களைச் சேர்ந்த 10,043 ஆப்கன் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட ஆப்கன் மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானின் ஹெராத், நிம்ரோஸ், கந்தாஹர், ஹெல்மாண்ட் மற்றும் நாங்கர்ஹார் ஆகிய பகுதிகளின் வழியாகத் தாயகம் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் மற்றும் தாக்குதல்களில் இருந்து உயிர் பிழைத்த லட்சக்கணக்கான ஆப்கன் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாத் தஞ்சமடைந்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது முதல் பாகிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் ஆப்கன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டாக்காவில் 12 மாடி கட்டடத்தில் தீ விபத்து: 42 பேர் மீட்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.