சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி கடற்கரைக்கு விரையும் ஆம்புலன்ஸ் வாகனங்கள்.
சிட்னி கடற்கரைக்கு விரையும் ஆம்புலன்ஸ் வாகனங்கள். PTI
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் கடற்கரையில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாட ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது துப்பாக்கியுடன் வந்த 2 பேர் அங்கு கூடியிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் அடங்குவர் எனக் கூறப்படுகிறது. மேலும் 12 பேர் காயமடைந்ததாக தெரிகிறது. பலர் சுடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், ஆம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன.

நியூ சௌத் வேல்ஸ் மாகாண போலீஸார் வெளியிட்ட அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை இரண்டு பேர் காவலில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களே என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு 14 நாள் காவல்

சம்பவ இடத்தில் இருந்த நபர் AFP செய்தி நிறுவனத்திடம், சம்பவ இடத்தில் கருப்பு உடை அணிந்து வந்த இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்தார். இதனிடையே ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பனேசி, சிட்னி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.

அந்தப் பகுதியில் உள்ளவர்கள் நியூ சௌத் வேல்ஸ் போலீஸார் வழங்கும் தகவல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பட்டுள்ளார்.

Summary

Ten people were killed in a shooting at Sydney’s Bondi Beach on Sunday, police said, without confirming whether the toll included the attacker.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com