

அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரௌன் பல்கலைக் கழகத்தில் சனிக்கிழமையில் (டிச. 13) தேர்வுக்காக மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், உள்நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் 2 பேர் பலியான நிலையில், 9 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனை சிகிச்சையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், உடனடியாக சம்பவ இடத்தைவிட்டு வெளியேறிய நிலையில், அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், உயிரிழந்தவர்களுக்காக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.