

தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வரை ஓயமாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
கைபர் பக்துண்க்வா மாகாணத்தில் இயங்கி வரும் ஒரு பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை(டிச. 14) பயங்கரவாதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் மாணவர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் வடமேற்கு பாகிஸ்தான் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்களைத் தேடும் பணியில் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து போலீஸாரும் ஈடுபட்டனர்.
அப்போது, 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் தெஹ்ரீக்-இ-ரெஹ்மான் இயக்க தளபதி டேனிஷ், ஜராரி குழுவைச் சேர்ந்த அபு சாலே டாவர் ஜராரி மற்றும் அதா-உர்-ரெஹ்மான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடைசி பயங்கரவாதி பிடிபடும் வரை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் போலீஸாரின் கூட்டு தேடுதல் வேட்டை தொடரும் என்று காவல்துறை உயரதிகாரி பன்னு யாசிர் அப்ரிதி திங்கள்கிழமை(டிச. 15) தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.