பாகிஸ்தானில் பேருந்தில் பயணித்த 18 பயணிகளை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் குவெட்டாவை நோக்கி பேருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. சிந்து மற்றும் பஞ்சாப் எல்லையின் கோட்கி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது அதன் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
பின்னர் பேருந்தில் பயணம் செய்த 18 ஆண் பயணிகளை பணயக் கைதிகளாக அவர்கள் பிடித்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் சிலர் காயமடைந்தனர். மர்ம நபர்கள் 18 முதல் 20 வரை இருந்தனர் என்றும் அவர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்ததோடு ஆயுதங்களும் வைத்திருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் பேருந்தில் பயணம் செய்த அனைவரையும் கிழே இறங்கச் சொல்லியதாகவும், ஆனால் அவர்கள் பெண் பயணிகளுக்கு எந்த இடையூறும் அளிக்கவில்லை என பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்தில் ஓட்டுநனர், நடத்துனரை தவிர்த்து 30 பயணிகள் இருந்தனர் என்று சிந்து மாகாண உள்துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் ஜியா உல் ஹசன் தெரிவித்தார். பாகிஸ்தானில் பேருந்து மீது தாக்குதல் நடத்தி அதிலிருந்த பயணிகள் கடத்தப்பட்டுவிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது-
Summary
Eighteen people were abducted by unidentified gunmen in Pakistan's Sindh province while they were en route to Quetta in a bus.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










