

இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான்பரப்பை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதம் நீட்டித்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இந்திய விமானங்கள் தங்கள் வான்பரப்பை பயன்படுத்த பாகிஸ்தான் தடைவிதித்தது. எனினும், இந்திய விமானப் படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அங்குள்ள பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தது.
இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்த தடை விதித்தது. எனினும், அண்மையில் இலங்கைக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் விமானத்தை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுமதித்தது.
அதே நேரத்தில் பாகிஸ்தான் தனது தடையை மாதந்தோறும் நீட்டித்து வருகிறது. டிசம்பா் 24-ஆம் தேதியுடன் தடை நிறைவடைய இருப்பதால், அதை ஜனவரி 24 வரை நீட்டிப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள், இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்கள், இந்திய ராணுவ விமானங்களுக்கு இந்தத் தடை பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.