தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி கொடுத்து பாகிஸ்தான் அதிபர் மகன் சர்ச்சையில் சிக்கியுள்ளதைப் பற்றி...
பிலவல் பூட்டோ | துரந்தர் படத்தில் அக்‌ஷய் கன்னா.
பிலவல் பூட்டோ | துரந்தர் படத்தில் அக்‌ஷய் கன்னா.
Updated on
2 min read

சர்ச்சையில் பிலவல் பூட்டோ : ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி கொடுத்து பாகிஸ்தான் அதிபர் மகன் பிலவல் பூட்டோ சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், அக்‌ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் நடிப்பில் உருவான திரைப்படம் துரந்தர். பாகிஸ்தானில் உளவுப்பணி பார்க்கும் இந்திய ராணுவ வீரரின் கதையாக உருவான இப்படம் பல உண்மைச் சம்பங்களையும் கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

படம் முழுவதும் பாகிஸ்தானில் நடைபெறுவது போன்ற காட்சிகளும் 3.30 மணிநேரம் அளவுகொண்ட திரைப்படத்தில் பெரிய தொய்வாக அமையாதது படத்திற்கு பலமாக அமைந்திருந்தது. 1999 ஆம் ஆண்டு காந்தஹார் விமானக் கடத்தல், 2008 ஆம் ஆண்டு மும்பை வெடிகுண்டு தாக்குதல்கள் போன்றவைகளைக் காட்டும் இந்தப் படத்திற்கு வளைகுடா நாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முதல் வாரத்தில் வசூலில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக இந்தப் படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய் கன்னாவின் நடன ரீல்ஸ் இன்ஸ்டாகிராமில் வைரலானதைத் தொடர்ந்து படத்திற்கான டிக்கெட்கள் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டன.

தற்போது பாகிஸ்தானில் உளவு பார்க்கச் செல்வதுபோன்ற ரீல்ஸுகளும் வைரலாகி வருவதால் இரண்டாம் வாரத்தில் உலகளவில் ரூ. 640 கோடி வரை வசூலித்து சக்கைபோடு போட்டு வருகிறது துரந்தர்.

இந்தாண்டு இறுதிவரை வேறு பெரிய படங்கள் இல்லையென்பதால் துரந்தர் ரூ. 1000 கோடியை நெருங்குவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடகர் ஃபிளிப்பராச்சி என்பவரின் ‘FA9LA’ என்ற பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி தாரி மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலவல் பூட்டோ நிகழ்ச்சி ஒரு கலந்துகொள்ள வந்தபோது, துரந்தர் படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல் ஒலிபரப்பப்படுகிறது.

பாகிஸ்தான் எதிர்ப்பு படமாக உருவாகியுள்ள துரந்தர் படத்துக்கு பாகிஸ்தானில் நடிகர் ரன்பீர் சிங், இயக்குநர் ஆதித்ய தார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் பாடலுடன் பிலவல் பூட்டோ நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்ததற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் படங்களும் சட்டவிரோதமாக படத்தில் பயன்படுத்தப்பட்டதைக் கேள்வி எழுப்பி, பிலவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியே கராச்சி நீதிமன்றத்தில் படத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் படங்களும் சட்டவிரோதமாக படத்தில் பயன்படுத்தப்பட்டதைக் கேள்வி எழுப்பி, பிலவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியே கராச்சி நீதிமன்றத்தில் படத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2 வாரங்களில் பாகிஸ்தானில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் சட்டவிரோதமான இந்தப் படத்தைப் பதிவிறக்கி பார்த்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்தின் 2.0 மற்றும் ஷாருக்கானின் ரயீஸ் படங்களை முந்தி, பாகிஸ்தானில் சட்டவிரோதமாகப் பதிவிறக்கிப் பார்க்கப்பட்ட படமாகவும் துரந்தர் மாறியுள்ளது.

இந்தப் படம் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டதால் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ரூ.50 முதல் ரூ. 60 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் பட நிர்வாக வட்டாரங்கள் கூறுகின்றன.

பிலவல் பூட்டோ | துரந்தர் படத்தில் அக்‌ஷய் கன்னா.
இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!
Summary

Dhurandhar seems to be riding the wave of popularity in Pakistan, FA9LA- a viral song from the film-- has become a party staple across the nation. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com