

செய்யறிவுத் துறையில் அதிக மதிப்பீடுகள் கொண்ட நிறுவனங்களால் நீண்ட காலம் நீடித்திருக்க முடியாது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்யறிவு குறித்து அபுதாபியில் ஒரு தொழில் மாநாட்டில் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் பேசுகையில், "செய்யறிவுத் துறை மிகவும் போட்டிவாய்ந்த துறையாக மாறி விட்டது. இருப்பினும், பெரும்பாலும் அதிக மதிப்பீடுகள் கொண்ட செய்யறிவு நிறுவனங்களால் நீண்ட காலம் நீடித்திருக்க முடியுமா? இல்லை என்பதுதான் பதில்.
ஏஐ ஒரு குமிழி போன்றது. இதில் அனைத்தின் மதிப்பீடுகளும் அதிகரிக்காது, சிலவற்றின் மதிப்பீடு குறையவும் செய்யும். பல ஏஐ நிறுவனங்கள், சராசரியைவிட மிக அதிகமான மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன.பல நிறுவனங்களுக்கும், வருங்காலத்தில் இதே மதிப்பு இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆகையால், முதலீட்டாளர்கள் ஒரு மாபெரும் சரிவுக்குத் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
செய்யறிவைச் சுற்றிய வியாபாரம், முதலீடுகளையே எச்சரிக்கிறோம். நிறுவனங்கள், தங்களுக்கான வியாபாரத் திட்டத்தையோ யுக்தியையோ கொண்டிருந்தால் மட்டும் நிலைத்திருக்க முடியும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.