ஐக்கிய அமீரக அதிபர் டிச.26-ல் பாகிஸ்தான் பயணம்! மற்றொரு ராணுவ ஒப்பந்தம்?

ஐக்கிய அமீரக அதிபர் டிச.26-ல் பாகிஸ்தான் செல்வது குறித்து...
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான்AP
Updated on
1 min read

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரும் டிச.26 ஆம் தேதி பாகிஸ்தான் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியின் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருமான ஷேக் முகமது சயீத் அல் நஹ்யான் வரும் டிச.26 ஆம் தேதி அரசு முறைப் பயணமாக, பாகிஸ்தான் செல்கின்றார்.

இந்தப் பயணத்தில், அவர் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, வளர்ச்சி உள்ளிட்ட துறைகளின் சில முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், முதல்முறையாக பாகிஸ்தான் செல்லும் அதிபர் ஷேக் முகமதுடன் அமீரகத்தின் சில முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சௌதி அரேபியா அரசுடன், பாகிஸ்தான் முக்கிய ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீதான தாக்குதல்கள் அனைத்தும் தங்களது மீதான தாக்குதலாகக் கருதப்படும் என சௌதி அரேபியா அறிவித்துள்ளது.

இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் பாகிஸ்தான் செல்வது அந்நாட்டின் ராணுவ கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தக்கூடும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஒரே நாளில் 3000 ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்! ஈரான், பாக். அரசுகள் நடவடிக்கை!

Summary

It has been reported that the President of the United Arab Emirates, Sheikh Mohammed bin Zayed Al Nahyan, will visit Pakistan on December 26th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com