

செய்யறிவு வருகையால் மென்பொருள் பொறியாளர்கள் வேலையிழந்த நிலை மாறி, 2026 துவங்கவிருக்கும் நிலையில் கூகுள் நிறுவனம் தன்னுடைய முன்னாள் ஊழியர்களை மீண்டும் பணியமர்த்தி வருகிறது.
கூகுள் நிறுவனத்துக்கு போட்டியான செய்யறிவு தளங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், போட்டியை தீவிரப்படுத்தும் வகையிலும் முன்னாள் மென்பொருள் பொறியாளர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
ஓபன்ஏஐ, மெட்டா, ஆந்தோபிக் உள்ளிட்ட செய்யறிவுகளின் வருகையால், சற்று மிரண்டு போயிருக்கும் கூகுள், செய்யறிவு வந்துவிட்டது, இடத்தை காலி செய்யுங்கள் என்று கூறி ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது கூகுள். ஆனால், போட்டியை சமாளிக்க போதுமான ஊழியர்கள் இல்லாததால், பின்தங்குவோமோ என்ற பயம் வாட்ட, உடனடியாக முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.
கிட்டத்தட்ட 20 சதவீத செய்யறிவு மென்பொருள் பொறியாளர்களை மீண்டும் பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.
இதில், 2023ஆம் ஆண்டில் பணியிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களே பெரும்பாலும் அழைக்கப்பட்டிருப்பதாகவும், ஒருபக்கம் பணித்திறனைக் காரணம் காட்டி பணி நீக்கமும் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில், பணி நீக்க நடவடிக்கைகள் மாறி, மீண்டும் பணியமர்த்தும் சூழல் அதிகரித்திருப்பதாகவே தரவுகளும் தெரிவிக்கின்றன.
இது மட்டுமல்லாமல், கூகுளின் முன்னாள் ஊழியர்களுக்கு, போட்டி நிறுவனங்களும் மிகப்பெரிய ஊதியத்தில் பணி வாய்ப்புக்கான அழைப்புகளை விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டு சற்று மிரட்டலைச் சந்தித்தாலும், 2026 நிச்சயம் மென்பொருள் துறையினருக்கானதாக மாறும் என்று இந்த நிலை காட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.