மியான்மர்: 5 ஆண்டுகளில் முதன்முறையாக பொதுத் தேர்தல்!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு மத்தியில் 5 ஆண்டுகளில் முதன்முறையாக இன்று பொதுத் தேர்தல்..
மியான்மர் தேர்தல்
மியான்மர் தேர்தல்AP
Updated on
1 min read

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு மத்தியில் 5 ஆண்டுகளில் முதன்முறையாக இன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

மியான்மரில் 2021 பிப்ரவரியில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இந்த நிலையில், 5 ஆண்டுகளில் முதன்முறையாக பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

மியான்மர் தேர்தல்
மியான்மர் தேர்தல்AP

தேர்தலை 3 கட்டங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் கட்டமாகவும், இரண்டாவது கட்டம் ஜனவரி 11 ஆம் தேதியும், மூன்றாம் கட்டம் ஜனவரி 25 ஆம் தேதியிலும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, ஜனவரி இறுதிக்குள் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.

இருப்பினும், முக்கிய கட்சிகள் விலக்கப்பட்டதாலும், பேச்சு சுதந்திரம் மற்றும் அடக்குமுறைச் சூழல் மீதான வரம்புகள் காரணமாகவும் முடிவுகள் சட்டப்பூர்வமானதாக இருக்காது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மியான்மரில் உள்நாட்டுப் போர் காரணமாக, 36 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாக ஐநா கூறுகிறது.

மியான்மர் தேர்தல்
உக்ரைன் போா் நிறுத்தம்: டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு!
Summary

Polls open for military-ruled Myanmar's first election in 5 years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com