உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்: 6 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 6 பேர் பலியானார்கள்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 6 பேர் பலியானார்கள்.

உக்ரேனிய நகரமான பொல்டாவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் பலியானார்கள்.

மேலும் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் அவசர சேவைகள் சனிக்கிழமை தெரிவித்தன.

தாக்குதலைத் தொடர்ந்து இடிந்து விழுந்த ஐந்து மாடி கட்டடத்தில் இருந்து சுமார் 22 பேர் மீட்கப்பட்டதாக பொல்டாவா பிராந்தியத்தின் தற்காலிக ஆளுநர் வோலோடிமிர் தெரிவித்தார்.

தாக்குதலில் பலியானவர்களுக்கு மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர் சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து உள்ளனர் என்றார்.

தோல்வி விரக்தியில் வன்முறையில் ஈடுபடும் பாஜக: கேஜரிவால் கண்டனம்!

இதனிடையே மற்றொரு சம்பவத்தில் கார்கிவ் பகுதியில் டிரோன் கீழே விழுந்ததில் 60 வயது பெண் ஒருவர் பலியானார் என்று உள்ளூர் ஆளுநர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்தார்.

ரஷியா-உக்ரைன் இடையேயான போா் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக தொடா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com