தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் சிஜேபி போராட்டம்! பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது! தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக! - கனிமொழி விமர்சனம் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம் சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!

தோல்வி விரக்தியில் வன்முறையில் ஈடுபடும் பாஜக: கேஜரிவால் கண்டனம்!

தில்லி தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் தாக்கியதாக அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Published On :

தில்லி தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் தாக்கியதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் வருகிற புதன்கிழமையில் (பிப். 5) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரசாரத்தின்போது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வான மகேந்திர கோயல் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது ``தில்லி தேர்தலில் பாஜக மோசமான தோல்வியடைந்து வருகிறது. தோல்வி விரக்தியில் இப்போது வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மகேந்திர கோயல் மீதான பாஜகவினரின் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கிறோம்’’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடமேற்கு தில்லியின் முக்கியத் தொகுதியான ரித்தாலாவில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மகேந்திர கோயல் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதே தொகுதியில் பாஜகவின் குல்வந்த் ராணாவும், காங்கிரஸின் சுஷாந்த் மிஸ்ராவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் பிரசாரத்தின்போது மகேந்திர கோயலை பாஜகவினர் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், தாக்குதலால் மயக்கமடைந்த மகேந்திர கோயல் அம்பேத்கர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற பிப். 5 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் பிப். 8 அன்று வெளியிடப்படவுள்ளன. இந்தத் தேர்தலில் முன்னணி கட்சிகளாக ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.