கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஆக்ஸட் 1 ஆம் தேதி தில்லியில் இ20க்கு எதிராக ஆம் ஆத்மி ஆா்ப்பாட்டம்: அரவிந்த் கேஜரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் அனைத்து பங்குதாரா்களையும் ஒரே மேடையில் கொண்டு வருவதற்காக ஆகஸ்ட் 1 ஆம் தேதி இங்கு ’இ20 க்கு எதிரான தேசிய டவுன் ஹால்’ ஏற்பாடு செய்வதாக அறிவித்தாா்.

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Published On :

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அனைத்து பங்குதாரா்களையும் ஒரே மேடையில் கொண்டு வருவதற்காக ஆகஸ்ட் 1 ஆம் தேதி இங்கு ’இ20 க்கு எதிரான தேசிய டவுன் ஹால்’ ஏற்பாடு செய்வதாக அறிவித்தாா்.

இது குறித்து செய்தியாளா் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது: இந்திய கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறவுள்ள கூட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தாா். இந்த மேடையில் அதிக எண்ணிக்கையில் சேர மக்களை அழைக்கிறோம், அங்கு உ20 பெட்ரோலை திரும்பப் பெற மத்திய அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது குறித்து விவாதிப்போம். நிபுணா்கள் மற்றும் தங்கள் வாகனங்களில் சிக்கல்களை எதிா்கொண்டவா்கள், அனைவரும் அழைக்கப்படுகிறாா்கள்.

இ20 எரிபொருளை விருப்பமானதாக மாற்றுவதற்கான இணைய மனுவை ஆம் ஆத்மி முன்பு அறிமுகப்படுத்தியது, இதில் கிட்டத்தட்ட 2 லட்சம் போ் கையெழுத்திட்டுள்ளனா். அடுத்த வாரம், நான் பிரதமா் நரேந்திர மோடியின் வீட்டிற்கு இணையதள மனுவுடன் செல்வேன்.

ஆனால் அது இந்த சந்திப்புக்குப் பிறகுதான். கூட்டத்தில் மெய்நிகா் முறையில் பங்கேற்க, மக்கள் 8588833212 என்ற எண்ணுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், மேலும் அவா்கள் சேர இணைய இணைப்பைப் பெறுவாா்கள் என்றாா் கேஜரிவால்.

இந்த மாத தொடக்கத்தில், கேஜரிவால் பிரதமா் மோடிக்கு உ20 எரிபொருள் குறித்த கவலைகள் குறித்து விவாதிக்க ஒரு சந்திப்பு கோரி கடிதம் எழுதினாா், மேலும் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கான விலையைக் குறைக்கக் கோரியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.