சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஆக. 1ல் இ20 எரிபொருளுக்கு எதிராக மக்கள் சந்திப்பு: ஆம் ஆத்மி அழைப்பு!

இ20 எரிபொருள் விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 1-ல் தேசிய மக்கள் சந்திப்புக்கு கேஜரிவால் அழைப்பு..

News image

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 1:49 pm IST

இ20 எரிபொருள் விவகாரம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் தேசிய மக்கள் சந்திப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது இ20 ஜனதா கட்சி என்ற புதிய இயக்கம் உருவாகியுள்ளது.

பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் மத்திய அரசின் கொள்கைக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு நிலவி வரும் சூழலில் அந்த எதிர்ப்பை ஒருங்கிணைக்கத் தொடங்கப்பட்டுள்ள இ20 ஜனதா கட்சி, எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், தில்லியில் செய்தியாளர்கள் பேசிய கேஜரிவால் கூறியதாவது,

இ20 கூட்டம் ஆகஸ்ட் 1-இல் கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆஃப் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

இ20 பெட்ரோல் பயன்பாட்டைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்படவுள்ள இந்த மேடையில் மக்கள் பெருமளவில் இணையுமாறு நாங்கள் அழைக்கிறோம்.

நிபுணர்கள், தங்கள் வாகனங்களில் இ20 எரிபொருளால் சிக்கல்களைச் சந்தித்தவர்கள் என அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

இ20 எரிபொருள் பயன்பாட்டை விருப்பத் தேர்வாக மாற்றக்கோரி ஆம் ஆத்மி கட்சி ஏற்கெனவே ஒரு இணையவழி மனுவைத் தொடங்கியிருந்ததாகவும், அதில் சுமார் 2 லட்ச பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, அடுத்த வாரம், அந்த இணையவழி மனுவுடன் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு நான் செல்லவுள்ளேன்.

இக்கூட்டத்தில் இணையவழியாக (virtual) பங்கேற்க விரும்புவோர் 8588833212 என்ற எண்ணுக்குச் செய்தி அனுப்பினால், இணைவதற்கான இணையவழி இணைப்பு (link) அவர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில், இ20 எரிபொருள் குறித்து விவாதிக்கவும், எத்தனால் கலந்த பெட்ரோலின் விலையைக் குறைக்கவும் கோரி பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கேட்டு கேஜரிவால் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

AAP national convenor Arvind Kejriwal on Monday announced that the party will organise a 'National Town Hall Against E20' here on August 1 to bring all stakeholders onto a single platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.